×

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: மழை பெய்யவும் வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மே 4ம் தேதி கத்திரி வெயில் ெ தாடங்க உள்ள நிலையில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் கூடிய வானிலை இருக்கும் என்பதால் வெயில் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் வெயில் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசாவின் சில இடங்கள், பீகார் மேற்கு வங்கம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இன்றும் நாளையும் கடும் வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை கணித்துள்ளது.

அதேபோல ராயலசீமா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா, உள் கர்நாடகா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் கேரளாவில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாகே, கர்நாடகாவில் சில இடங்கள் 5 நாட்களுக்கு வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. இது சுமார் 25 ந ாட்கள் நீடிக்கும். ஆனால், வானிலை நிகழ்வுகளின்படி கத்திரி வெயில் நாட்களில் அனல் அதிகம் இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப, தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு இன்று முதல் 3ம் தேதி வரை உள்ளது. மேலும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையை பொருத்தவரையில் 4ம் தேதி வரை இயல்பைவிட சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். 3ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் 4ம் தேதி வரையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்பும் உள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: மழை பெய்யவும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Kathri Veil Tadanga ,Meteorological Centre ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...